Thalapathi 63 Cast

Thalapathy 63 Cast : தளபதி 63 படத்தை பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி கொண்டே வருகின்றன. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் சர்கார் படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க உள்ளார்.

AGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க விவேக், யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ளனர். மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் விஜய் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

மேலும் இன்று இப்படத்தின் போஸ்டர் டிசைனராக சர்கார், மெர்சல், தெறி, கத்தி ஆகிய படங்களில் பணியாற்றி இருந்த கோபி பிரசன்னா கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தில் முக்கிய வேடங்களில் இளம் நடிகரான கதிரும், மேயாத மான் இந்துஜாவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இன்று தொடர்ந்து தளபதி 63 படத்தை பற்றிய தகவல்கள் வெளியாகி கொண்டே இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.