Thalapathy 63 Cast : தளபதி 63 படத்தில் தான் நடித்து வரும் கதாபாத்திரம் என்ன என்ற ரகசியத்தை பிரபல நடிகர் போட்டுடைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் விஜய் 63 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறது.

OMG.. தளபதி 63-ம் திருட்டு கதையா? – பிரச்சனையில் சிக்கிய அட்லீ.!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

மேலும் முக்கிய வேடங்களில் நடிகர் கதிர், விவேக், யோகி பாபு, ஆனந்த ராஜ் ஆகியோர் நடிக்க வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கிறார்.

மேலும் சமீபத்தில் இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகரும் பேச்சாளருமான ஞான சம்மந்தம் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனை அவரே நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் நான் தளபதி 63 படத்தில் நயன்தாராவுக்கு அப்பாவாக நடித்து வருவதாகவும் கூறி படக்குழுவினரை ஷாக்காக்கியுள்ளார்.

காரணம் இதுவரை இந்த படத்தில் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களை பற்றி வெளியே சொல்லாத நிலையில் ஞான சம்மந்தம் அவர்கள் கூறிய விட்டது தான்.

Gnana Samabantham

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.