Thalapathy 63

Thalapathy 63 2nd Heroine : தளபதி 63 படத்தில் நயன்தாராவை தொடர்ந்து இளம் நாயகி ஒருவர் இணைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்திற்காக தான் ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அட்லீ இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பரியேறும் பெருமாள் கதிர், யோகி பாபு, ஆனந்த ராஜ், விவேக் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

தீவிரமடையும் அட்லி vs தயாரிப்பாளர் மோதல் – மௌனம் காக்கும் தளபதி!

இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் மேலும் ஒரு இளம் நாயகி இணைந்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த நடிகை வெறும் யாரும் இல்லை. மேயாத மான் திரைப்படத்தில் நடித்து பிரபலமான இந்துஜா தான் அவர். இவர் நடிகர் கதிருக்கு ஜோடியாக தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை AGS சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.