தளபதி விஜய் அவர்கள் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார் அதன் வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

ரசிகர்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் தளபதி விஜய். மாபெரும் ரசிகர் கூட்டத்தை பெற்ற இவர் தற்பொழுது வம்சி இயக்கிக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க பிரபு, சரத்குமார், யோகி பாபு, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஷாம், குஷ்பூ என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த விஜய்…!! உற்சாகத்துடன் ரசிகர்கள் வெளியிட்டுள்ள வீடியோ ட்ரெண்டிங்!.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள எண்ணூரில் நடந்து வருகிறது. அதனால் அங்கு உள்ள ஏராளமான விஜய் ரசிகர்கள் அவரை பார்க்க கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். அந்த வகையில் நேற்று நள்ளிரவு அவரைப் பார்க்க ரசிகர்கள் குவிந்ததால், வெளியில் வந்த விஜய் அவர்கள் ரசிகர்களுக்கு கையசைத்துள்ளார். அந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டு டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.