தளபதி 68 திரைப்படத்தின் நியூ அப்டேட் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்கள் வாரிசு திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் மும்பரமாக செயல்பட்டு வருகிறார். அனிருத் இசையமைப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரை இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதற்கிடையில் நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 68 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வேற லெவலில் உற்சாகப்படுத்தியுள்ளது.

அதன்படி தளபதி 68 திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படம் வரும் 2024 ஆம் ஆண்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து இப்படம் தொடர்பான புது தகவல்களாக இதில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க இருப்பதாகவும், கதாநாயகியாக நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாகவும் இது குறித்து அவரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் படம் குறித்த புது அப்டேட்டாக தளபதி 68 படத்தின் டைட்டில் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக நம்ப தகுந்த சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அதே நாளில் லியோ படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாக இருப்பதாகவும் அதற்கு நடிகர் கமல்ஹாசனின் வாய்ஸ் ஓவர் கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.