தளபதி 67 திரைப்படம் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் இளைய தளபதியாக பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகி அண்மையில் வெளியான “வாரிசு” திரைப்படத்தில் நடித்திருந்தார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைத்திருக்கிறார்.

விரைவில் இணையத்தை கலக்க இருக்கும் தளபதி 67 அப்டேட்!!… தயாரிப்பாளரின் பேட்டியால் ரசிகர்கள் உற்சாகம்.!

ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் வேட்டையாடி வரும் இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் “தளபதி 67” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட் இன்னும் பத்து நாட்களில் ஒவ்வொன்றாக வெளியாகும் என்ற தகவலை தயாரிப்பாளர் லலித் குமார் பேட்டியாளர்களை சந்தித்து பேசுகையில் தெரிவித்திருக்கிறார். இந்த தகவலின் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.