தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த முதல் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட் திரை உலகை ரசிகர்கள் கொண்டாடும் இளைய தளபதியாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

அனிருத் இசை அமைப்பில் உருவாக இருக்கும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் தொடர்பான உறுதியான அப்டேட் நேற்றைய தினம் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை புது புது தகவல்களுடன் இணையத்தில் ட்ரெண்டிங் லிஸ்டில் இருந்து வருகிறது.

அந்த வகையில் ரசிகர்களை மேலும் உற்சாகமூட்டும் வகையில் படக்குழு இப்படத்தின் முதல் கேரக்டர் அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிகை இருப்பதாக மிரட்டலான போஸ்டரை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.