தளபதி விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் தளபதி 66 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட போவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் படத்திற்கான தற்காலிகமாக வைத்திருக்கும் பெயர்தான் தளபதி 66. இப்படத்தை இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கிக் கொண்டிருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது.

இப்படத்திற்கான படப்பிடிப்பு தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் சில தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதேபோல் இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் தளபதி 66 படத்திற்கான “ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்” வரும் ஜூன் 21 ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக தகவலை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்து இருக்கின்றனர்.