Thalapathy 64

Thalapathi 64 : இயக்குனர் சிவா இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படம் தளபதி 64 எனவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் சிறுத்தை படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இவர் சிறுத்தை படத்தை தொடர்ந்து தல அஜித்துடன் இணைந்தார்.

பள்ளி பாட புத்தகத்தில் விஜயின் பாடல், என்ன பாடல் தெரியுமா? – புகைப்படத்தை பாருங்க.!

இந்த கூட்டணி வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 படங்களாக தொடர்ந்தது. விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சிறுத்தை சிவாவோ விஜயை இயக்க திட்டமிட்டுள்ளார். இது குறித்து விஜய் தரப்பில் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

விஸ்வாசம் செட்டில் விஜயை பாராட்டிய அஜித் – முதல் முறையாக வெளியான தகவல்.!

மேலும் ஏற்கனவே விஜய் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் தருவதாக வாக்கு கொடுத்துள்ளாராம். இதனால் சிவா விஜயை வைத்து இயக்கும் படமாகவும் அது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.