Rajini and Kamal
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கமல் தயாரிக்க இருப்பதாகவும் இயக்குனர் யார் என்பது குறித்தும் தகவல் ஒன்று கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார்.

பக்கா கிராமத்து கதையாக உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக கமலுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

ஆம் தலைவர் 169 படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவலை சம்மந்தப்பட்ட யாவரும் உறுதி செய்யவில்லை, இருப்பினும் சமூக வளையதளங்களில் ட்ரெண்டிங்கான தகவல் இது தான்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.