Thalaivi to be shot for 2 years : Jayalalithaa | AL.Vijay | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Thalaivi to be shot for 2 years :

ஆகஸ்ட் மாதம் துவங்கும் இதன் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகள் வரை நடைபெற உள்ளதாம

தமிழில் தற்போது பயோபிக் படங்கள்தான் டிரெண்ட். அந்தவகையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மட்டுமே மூன்று பேர் படமாக்கி வருகிறார்கள்.

இதில் ஒரு படத்தை விஜய் இயக்குகிறார். தலைவி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

இதற்காக இவருக்கு இந்தியாவில் இதுவரை எந்த நடிகைக்கும் பேசப்படாத சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிப்பதற்காக கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரை ஹோம் வர்க் செய்ய கங்கனா திட்டமிட்டுள்ளாராம்.

‘கத்துக்கறேன் தலைவரே’ – சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

இந்த காலக்கட்டத்தில் வேறெந்த படத்திலும் நடிக்காமல் வெளியில் கூட தலைக்காட்டாமல் இருக்க கங்கனா முடிவு செய்துள்ளாராம்.

மேலும் ஆகஸ்ட் மாதம் துவங்கும் இதன் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகள் வரை நடைபெற உள்ளதாம் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை 16 வயதிலிருந்து துவங்குவதால்,

இப்படத்தை ஒவ்வொரு காட்சியாக செதுக்க விஜய் திட்டமிட்டுள்ளாராம் கூடவே இப்படத்தின் பட்ஜெட் 100 கோடி வரை செல்லும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.