Thalaivi Second Look Poster
தலைவி படத்தில் இருந்து புது போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

Thalaivi Second Look : தமிழ் சினிமாவில் நடிகையாகவும் தமிழகத்தில் முதல்வராகவும் இருந்தவர் செல்வி ஜெ. ஜெயலலிதா. இவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்ததை அடுத்து இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் பல இயக்குனர்கள் கிளம்பி விட்டனர்.

தனுஷின் மூத்த பையனா இது?? இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படம்.!

நித்யாமேனனை வைத்து பிரியதர்ஷினி என்பவர் ஐயன் லேடி என்ற பெயரில் படமாக்கி வருகிறார். கெளதம் மேனன் வெப் சீரிஸ் தொடரை படமாக்கி முடித்து விட்டார். இதுவும் ரிலீசாகி விட்டது.

இது மட்டுமில்லாமல் இயக்குனர் ஏ.எல் விஜய் தலைவி என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறார். இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி விமர்சனத்திற்கு ஆளானது, சுத்தமா நல்லாவே இல்லை என பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாள் விருந்தாக இன்னொரு லுக் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரும் ஜெயலலிதா போலவே இல்லை என்பது பலரின் விமர்சனம்.

எம்.ஜி ஆர், ஜெயலலிதா வெர்சனில் ரவுடி பேபி பார்த்திருக்கீங்களா? – இணையத்தில் கலக்கும் வீடியோ.!

நீங்க ஜெயலலிதாவ பார்த்திருக்கிறீர்களா? இல்லையா? என நெட்டிசன்கள் ஆளாளுக்கு கிண்டலடிக்கின்றனர். அதே சமயம் ஜெயலலிதாவின் இளமை தோற்றம் இப்படி தான் இருந்தது. கங்கனாவிற்கு இது சிறந்த படமாக இருக்கும் எனவும் இன்னொரு தரப்பு கமெண்ட் அடிக்கிறது.

இந்த போஸ்டர் எப்படி இருக்குனு நீங்க உங்க கருத்தை சொல்லுங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.