Thalaivi Release in OTT

மூன்று முறையாக தள்ளிப்போன தலைவி திரைப்படம் OTT-யில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானதலயடுத்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

Thalaivi Release in OTT : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, சமுத்திரகனி உள்ளிட்ட பல நடிகர்களின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தலைவி.

இந்த படம் கடந்த வருடம் வெளியாக இருந்தது. ஆனால் கொரானா அலை பரவல் காரணமாக படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளி போனது. இதனையடுத்து ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது கொரானா வைரஸின் இரண்டாம் அலை பரவி வருவதாலும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாலும் இந்த படம் மீண்டும் தள்ளிப்போனது. மறு ரிலீஸ் தேதியை குறிப்பிடாமல் படக்குழு ரிலீசை தள்ளி வைத்துள்ளது.

இதனால் படம் நேரடியாக OTT-யில் வெளியாகும் என தகவல் வெளியாக இது முற்றிலும் பொய், படம் முதலில் திரையரங்குகளில் தான் வெளியாகும். அதன் பின்னர் தான் OTT ரிலீஸ் என தெரிவித்துள்ளனர்.