Thalaivi Movie Digital Rights
Thalaivi Movie Digital Rights

தலைவி படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் அஜித், விஜய் படங்களின் வியாபாரங்களை மிஞ்சியுள்ளது.

Thalaivi Movie Digital Rights : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ எல் விஜய். இவர் தற்போது கங்கனா ரனாவத்தை வைத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழ், இந்தி என இரு மொழிகளில் இயக்கி வருகிறார்.

அஜித்தும் விஜய்யும் நல்லா இருப்பாங்க.. ஆனா இது அவங்களுக்கு பெரிய அவமானம் – பிரபல நடிகை பரபரப்பு பதிவு.!

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கேலி கிண்டல்களுக்கு உள்ளானது. அதன் பின்னர் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் கங்கனா ரனாவத் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இப்பாடத்தில் டிஜிட்டல் ரைட்ஸ்சை அமேசான் மற்றும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனங்கள் ரூபாய் 55 கோடிக்கு வாங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தலைவி படத்தின் டிஜிட்டல் ரைட் மட்டுமே 55 கோடிக்கு விற்பனையாகியுள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அஜித் விஜய் படங்களின் டிஜிட்டல் டிரைவ் கூட இந்த அளவிற்கு செல்லவில்லை என வியந்து வருகின்றனர்.

ஊரடங்கு நேரத்தில் ஒன்றுகூடி கேரம் விளையாடும் அஜித், விஜய், ரஜினி – யோகி பாபு வெளியிட்ட புகைப்படம்.!

தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தையே அமேசான் நிறுவனம் ரூபாய் 15 கோடிக்கு தான் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான பகில் திரைப்படத்தை ரூபாய் 14 கோடிக்கு வாங்கி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.