நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பழமொழி உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்துவரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

விரைவில் நிறைவடைய இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக இருக்கும் “தலைவர் 170” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியாகி உறுதியானதை தொடர்ந்து தற்போது படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

அதன்படி, ‘தலைவர் 170’ என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முஸ்லிம் போலீஸ் ஆபீஸராக நடிக்க இருப்பதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.