தலைவர் 170 படத்தை இயக்கப் போவது யார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Thalaivar 170 Movie Director Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான அண்ணாத்தை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 169 படத்தில் நடிக்கிறார்.

நெல்சனை தொடர்ந்து மீண்டும் இளம் இயக்குனருடன் இணையும் ரஜினிகாந்த்.. தலைவர் 170 பட இயக்குனர் இவரா??

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக மீண்டும் இளம் இயக்குனர் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

நெல்சனை தொடர்ந்து மீண்டும் இளம் இயக்குனருடன் இணையும் ரஜினிகாந்த்.. தலைவர் 170 பட இயக்குனர் இவரா??

கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கி வெற்றி கண்டுள்ள அருண்ராஜா காமராஜ் தான் ரஜினியை இயக்க போவதாக சொல்லப்படுகிறது. ரஜினிக்கு இவர் கூறிய கதையும் மிகவும் பிடித்து விட்டதாகவும் விரைவில் இந்த கூட்டணி அமையும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.