தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையை களமிறக்க உள்ளார் நெல்சன்.

Thalaivar 169 Heroine Update : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் நெல்சன் திலீப்குமார். கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் இந்த படத்தை தொடர்ந்து டாக்டர் என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார்.

டாக்டர் படத்திற்கு அடுத்ததாக தற்போது தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 169 என்ற படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

மேலும் இந்த படத்தில் தனக்கு ஜோடியாக நடிப்பவர் இளம் நடிகையாக இல்லாமல் ஓரளவிற்கு வயதானவராக இருக்க வேண்டும் என ரஜினி கட் அண்ட் ரைட்டாக கூறியிருந்தார். இதனால் நெல்சன் திலீப் குமார் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.