Thalaivar 168 Title
தலைவர் 168 படத்தின் டைட்டில் என்ன என்பது பற்றிய விவரம் தற்போது கசிந்துள்ளது.

Thalaivar 168 Title : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவர் 168.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தலைப்பிடப்படாத இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பூ, மீனா ஆகியோர் நடிக்க கீர்த்தி சுரேஷ் தங்கை வேடத்தில் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தன.

மேலும் நேற்று இப்படத்தின் ஃபேன் மேட் போஸ்டர் ஒன்று மன்னவன் என்ற பெயரில் வெளியாகி வைரலாகி குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின் படி இப்படத்தின் டைட்டில் மன்னவன் அல்ல அண்ணாத்த என்பது தான் என பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.