Thalaivar 168
விஸ்வாசம் படத்தை இயக்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பபை பெற்ற இயக்குனர் சிவா. இவரின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத்தை வேண்டாம் என்று கூறியுள்ளார்.

Thalaivar 168 Movie Update : தல அஜித்தை வைத்து வீரம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர் சிறுத்தை சிவா.

இவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து படம் இயக்க இருந்தார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் அவர்களின் அழைப்பை ஏற்று தலைவர் 168 படத்தை இயக்க உள்ளார்.

கதாநாயகியாக ஜோதிகா நடிக்க உள்ளார் என்று தகவல் வந்து இருந்த நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

பாவம்யா அந்த மனுஷன் ஏர்போர்ட்டில் ரஜினியை சுற்றி வளைத்த ரசிகர்கள் – வீடியோ .!

மேலும், இசையமைப்பாளராக தயாரிப்பாளர் தரப்பிலும் ரஜினிகாந்த் தரப்பிலும் அனிருத்தை சிபாரிசு செய்கிறார்கள். ஆனால், இயக்குனர் அவரை வேண்டாம் என்று அடம்பிடிக்கிறார்.

இதற்கு காரணம், அஜித்தை வைத்து சிவா இயக்கிய வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

அந்த படங்களில் வேலை செய்யும் போது அனிருத் மீது இயக்குனர் அதிருப்தியில் இருந்தார். அனிருத்தை தேவைப்படும் போது தொடர்பு கொள்ள முடியாது.

இவர் எப்பொழுது நினைக்கிறாரோ அப்போது தான் தொடர்பு கொள்வார்.

ரஜினி மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் இயக்குனர் சமாதானம் செய்து அனிருத்தை ஒப்பந்தம் செய்வார்களா என்று பிறகு தெரிய வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here