Thalaivar 168 Heroine
பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தது போல தற்போது சிறுத்தை சிவா இயக்க உள்ள புதிய படத்திலும் பழைய நடிகை ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க குஷ்பூ, மீனா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்பட்டு வந்தன.

இந்நிலையில் தற்போது நடிகை மீனா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.