Thalaivar 166 Updates
Thalaivar 166 Updates

Thalaivar 166 Updates : 90-களில் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் மூன்று வருடத்திற்கு ஒரு படம் என நடித்துவந்த ரஜினி சமீப காலமாக வருடத்திற்கு ஒரு படம் என சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்.

அந்தவகையில் 2.0, பேட்ட படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

கபாலி பாணியில் முருகதாஸ் படத்தில் நடிக்கும் ரஜினி – விவரம் உள்ளே!

ஏப்ரல் 10-ம் தேதி படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்படத்தில் ரஜினியின் கெட்டப் குறித்த ஒரு அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.

பேட்ட படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த நிஹாரிகா பசின் கான் இந்த படத்தில் காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்றி வருகிறார் என்ற விவரத்தை நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்..

இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பூட்ஸ் மற்றும் ஜெர்கின் போன்றவை குறித்து பதிவு செய்திருக்கிறார். இதை வைத்தே படத்தில் ரஜினியின் கெட்டப் எப்படியிருக்கும் என்ற விவரத்தை ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.

ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பேட்ட படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார்.