Thalaivar 166

Thalaivar 166 Music Director : முருகதாஸின் அடுத்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் நோ சொல்லி விட்டதாகவும் அதனால் அந்த வாய்ப்பு அனிருத்திற்கு சென்று விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ், இவர் இறுதியாக இயக்கிய சர்கார் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தது.

இருப்பினும் முருகதாஸ் சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருந்து அதன் பின்னர் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன் வந்திருந்தது.

மேலும் முருகதாஸ் இப்படத்தில் இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை நாடியுள்ளார். ஆனால் அவர் சில காரணங்களால் ரஜினிகாந்த் – முருகதாஸ் இயக்கும் படத்திற்கு நோ கூறியுள்ளார்.

இதனால் ரஜினிகாந்த் பேட்ட படத்திற்கு பரிந்துரை செய்த அனிருத்தையே இந்த படத்திற்கும் பரிந்துரை செய்துள்ளார்.

இதனால் இந்த படத்திற்கும் அனிருத்தே இசையமைக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.