Thalaivar 166

Thalaivar 166 Music : தலைவர் 166 இசையமைப்பாளர் இவர் தானோ என்ற சந்தேகம் அனிருத் செய்த செயலால் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருந்த பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்காக அதிகாரபூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் முருகதாஸும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

இதனை அனிருத் ரி-ட்வீட் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் சந்தோஷ் சிவன் தான் தலைவர் 166 படத்தின் ஒளிப்பதிவாளர் எனவும் அனிருத் தான் இசையமைப்பாளர் என கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.