Thalaivar 166 Movie

90-களில் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் மூன்று வருடத்திற்கு ஒரு படம் என நடித்துவந்த ரஜினி சமீப காலமாக வருடத்திற்கு ஒரு படம் என சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்.

அந்தவகையில் 2.0, பேட்ட படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

ஏப்ரல் 10-ம் தேதி படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்படத்தில் ரஜினியின் கெட்டப் குறித்த ஒரு அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.

நோ சொன்ன அஜித்தையும் விட்டு வைக்காத அரசியல் – இப்படி ஆகிடுச்சே

அதாவது பேட்ட படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த நிஹாரிகா பசின் கான் இந்த படத்தில் காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளார்.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தலைவரின் டிரைல் முடிந்துவிட்டது என்று பதிவு செய்துள்ளார். இதன்மூலம் ரஜினி 166 படத்தில் ரஜினியின் கெட்டப் தீர்மானிக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பேட்ட படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

Niharika

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.