Thalaivar 166

Thalaivar 166 : அஜித் வாங்கும் அதே சம்பளத்தில் தானும் நடிப்பதா என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்க இருந்த படத்தை தள்ளி போட்டு வருவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருந்த பேட்ட படத்தை அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

அறிக்கை விட்ட அஜித் இதையும் சொல்லணும் – சீமான் ஓபன் டாக்.!

இதற்கான வேலைகள் வேக வேகமாக நடந்து வந்த இந்த நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தால் படம் தள்ளி போய் வருவதாக கூறப்படுகிறது.

காரணம் ரஜினிகாந்த் பேட்ட படத்திற்கு பிறகு தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காக்கி விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த படத்தை தயாரிக்க உள்ள லைகா நிறுவனம் 2 பாயிண்ட் ஓ படத்திற்கு கொடுத்த 50 கோடி தான் சம்பளமாக கொடுக்கும் என கூறியுள்ளது.

அஜித் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ள படத்திற்கு ரூ 50 கோடி தான் சம்பளமாக வாங்க உள்ளார். எனவே அஜித் வாங்கும் சம்பளத்திற்கே தானும் நடிப்பதாக என அடம் பிடித்து படத்தை தள்ளி போட்டு வருவதாக கூறி வருகின்றனர்.

ஆனால் இன்னொரு தரப்பினரோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்படியான மனிதர் இல்லை. இது யாரோ கிளப்பி விட்ட தகவல்கள் தான் என கூறி வருகின்றனர்.

உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.