Thalaivar 166 Heroine

Thalaivar 166 Heroine : ரஜினிகாந்த் முருகதாஸ் இணைய உள்ள தலைவர் 166 படத்தின் ஹீரோயின் யார் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தை அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

மேலும் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நடக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்த நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அஹமத் அவர்கள் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த ட்வீட் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.