Thalaivan Irukiran Movie Updates
Thalaivan Irukiran Movie Updates

லாக் டவுன் முடிந்ததும் தலைவன் இருக்கிறான் திரைப்படம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalaivan Irukiran Movie Updates : தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தேவர் மகன்.

தற்போது இந்த படத்தின் தொடர்ச்சியாக தலைவன் இருக்கிறான் என்ற திரைப்படம் உருவாக உள்ளது.

கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான தேவர் மகன் படம் படி நாசரின் மகனாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. அல்லது அவர் கமல்ஹாசனின் மகனாகவும் நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அஜித் தயக்கத்துடன் பயந்து பயந்து நடித்த திரைப்படம் – இறுதியில் நடந்தது என்ன தெரியுமா?

மேலும் இப்படத்தில் நாயகிகளாக விஸ்வரூபம் படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதுமட்டுமல்லாமல் வடிவேலு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அவரே நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நீதி மையம் கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் தலைவன் இருக்கிறான் என்ற பெயரில் உரையாடிக் கொண்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.