Mahalakshmi

* சாஸ்திரங்களின் படி, நமது முன்னோர்கள் வீட்டில் விளக்கேற்றிய பின் தலை வாரக் கூடாது, கூந்தலை விரித்தப்படி, இருக்கக் கூடாது என்று கூறுவார்கள்.

* வீட்டில் விளக்கு வைப்பதற்கு, முன்பே பெண்கள் தலைவாரி, பூ முடித்து, நெற்றியில் திலகமிட்டுக் கொள்வது சிறப்பைத் தரும்.

* மாலை நேரம் இறைவழிபாட்டிற்கு உரிய நேரம், விளக்கேற்றுவதற்கு உகந்த நேரம் என்பதால், விளக்கேற்றும் அந்த நேரங்களில் திருமகளான மகாலட்சுமி நம் இல்லத்தில் உறைந்திருப்பாள் என்பது ஒரு ஐதீகம்.

* அந்த நேரத்தில் பெண்கள் கூந்தலை விரித்தபடி நிற்பது அல்லது தலை வாருவது போன்ற செயலில் ஈடுபடக் கூடாது. அவ்வாறு செய்தால் திருமகள் நம் இல்லத்தை விட்டு வெளியே சென்று விடுவாள்.

* திருமகள் தங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், தினமும் மாலையில் வீட்டின் பூஜை அறையிலும், வாசலிலும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

* அவ்வாறு தீபம் ஏற்றும் போது, வீட்டின் பின்புற கதவு இருந்தால், கதவினை முதலில் மூடி விட்டு பின்னர் விளக்கேற்ற வேண்டும். இவ்வாறு செய்தால், செல்வத்திற்கு அதிபதியான மகாலெட்சுமி நம் வீட்டில் நிலைத்திருப்பாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here