Thala61 Story Update
Thala61 Story Update

தல 61 படத்தின் இயக்குனர் மற்றும் கதை குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thala61 Story Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

எச் வினோத் இயக்கி வரும் இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களுக்கு படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். முதலில் விஜயிடம் கதை கூறி ஓகே வாங்கித்தந்த சுதா கொங்கரா சில காரணங்களால் அப்படத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

விஜய், வெற்றிமாறன் இணையும் படத்தின் கதை இதுதானா?? முதல் முறையாக வெளியான செம மாஸ் தகவல்.!

அதன் பின்னர் அஜித்திடம் இருந்து ஒரு சர்ப்ரைஸ்.. எனக்கு ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க என அஜித் கேட்க சுதா கொங்கரா கூறிய கதை தலைக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. ஆனால் இது விஜய்க்கு கூறிய கதை அல்ல.

இந்த கதை மிஷன் இம்பாசிபிள் ஸ்டைலில் உருவாகும் ஆக்சன் படமாக உள்ளது. தற்போது படத்தின் பிரி புரோடக்சன் வேலைகளை மும்மரமாக தொடங்கியுள்ளார் சுதா கொங்கரா.

அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் மிகப் பெரிய ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேர்கொண்ட பார்வை படத்தில் பெண் சுதந்திரம் குறித்துப் பேசிய அஜீத் அடுத்ததாக ஒரு பெண் இயக்குனர் இயக்கத்திலேயே நடிக்க உள்ளார் என்பது பாராட்டுக்குரிய ஒன்று.