Vishnu Vishal Tweet : தல தான் மாஸ் என விஷ்ணு விஷால் ட்விட்டரில் கூறியுள்ளார். மேலும் அவர் தளபதி குறித்தும் பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாகவும் பாக்ஸ் ஆபீஸ் கிங்காகவும் விளங்கி வருபவர்கள் தல அஜித் தளபதி விஜய்.
இவர்களை பற்றி பேசாத நடிகர் நடிகைகளே இருக்க வாய்ப்பில்லை. அப்படி தான் தற்போது ரசிகர்களுடன் உரையாடிய விஷ்ணு விஷாலும் அஜித், விஜய் பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அதாவது ரசிகர் ஒருவர் உங்களின் பேவரைட் நடிகர் யார்? தலயா? தளபதியா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
அதற்கு விஷ்ணு தல-னா மாஸ், தளபதினா ஸ்டைல் மொத்தத்தில் இருவருமே என்னுடைய பேவரைட் தான் என கூறியுள்ளார். மேலும் தல தளபதி கடின உழைப்பாளிகள் எனவும் தெரிவித்துள்ளார்.
thalapathy for style , thala for mass..n both for their unique hardwork 🙂
— VISHNUU VISHAL – VV (@vishnuuvishal) December 1, 2018