Thala Vs Thalaivar Pongal : பொங்கல் பேட்டியில் ஜெயிக்க போவது பேட்டயா? விஸ்வாசமா? என்ற எதிர்பார்ப்பு ரஜினி, அஜித் ரசிகர்களையும் தாண்டி அனைவரிடமும் உள்ள எதிர்பார்ப்பு.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பேட்ட படத்தில் நடித்துள்ளார்.
அதே போல தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நாடித்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த இரண்டு படங்களுமே வரும் பொங்கலுக்கு அதாவது ஜனவரி 10-ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த இரண்டு படத்தில் எந்த படம் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பேட்ட படம் கபாலி, காலா ஆகிய படங்களுக்கு பிறகு இது ஒரு சூப்பர் டூப்பர் படமாக இருக்கும் என்பது ட்ரைலரில் கண் கூடாக தெரிந்து விட்டது.
ஆனால் விஸ்வாசம் படம் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் பேட்ட படத்திற்கு விஸ்வாசம் படம் சற்றும் சலித்ததில்லை என கூறப்படுகிறது.
இரண்டு படங்களுமே அவர்களது ரசிகர்களுக்கு மிக பெரிய பொங்கல் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எவ்விதம் சந்தேகமும் இல்லை என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
அப்போ இந்த பொங்கல் தல தலைவர் பொங்கல் தான்.. என்ன ரசிகர்களே நீங்க கொண்டாட்டத்துக்கு தயாரா?