Thala Vs Thalaivar Movie

Thala Vs Thalaivar Movie :

பேட்ட Vs விஸ்வாசம் இந்த இரண்டு படங்களின் முதல் நாள் வசூல் எந்த அளவில் இருக்கும்? அதிகமான வசூல் ஈட்ட போவது பேட்டயா? விஸ்வாசமா? என்ற விவாதம் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக நடந்து வருகின்றன.

அந்த வகையில் இந்த படங்களில் முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும் என்ற தோராய கணிப்பு ஒன்றும் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படமும் தலை அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படமும் நாளை முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளன.

இந்த இரண்டு படங்களில் அதிக வசூல் ஈட்டப்போவது யாராக இருக்கும்? முதல் நாள் வசூல் எவ்வளவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உச்சம் தொட்டுள்ளது.

இந்நிலையில் கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுவதாவது என்னவென்றால் பேட்ட படத்தின் வசூலை விட விஸ்வாசம் அதிக வசூலை பெறும்.

அஜித், ரஜினி வீட்டை சுற்றி அலப்பறை செய்த தல ரசிகர்கள் – போட்டோவை பாருங்க.!

ஆனால் சென்னையில் பேட்ட தான் அதிக வசூல் செய்யும் எனவும் கூறுகின்றனர். இதற்கான காரணம் சென்னையை தவிர மற்ற இடங்களில் விஸ்வாசம் படம் அதிகமான தியேட்டர்களில் வெளியாக இருப்பது தான் காரணம் எனவும் கூறி வருகின்றனர்.

எது உண்மை? யார் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதையெல்லாம் படம் ரிலீசான பின்பு நாளைய வசூலை வைத்து தான் உறுதிப்படுத்த முடியும்.

எனவே இந்த கணிப்பு உண்மையாகுமா? அல்லது பொய்யாகி விடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here