Thala Thalapathy Fans

Thala Thalapathy Fans : விஸ்வாசத்துக்கு ஆதரவாக தளபதி ரசிகர்கள் களமிறங்கி கொண்டாட்டத்தை தொடங்கி இருப்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகை பிரம்மிக்க வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக, நல்ல நண்பர்களாக, ஆரோக்யமான போட்டியாளர்களாக வலம் வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.

அஜித், விஜய்க்கு இடையே இருக்கும் ஒற்றுமை இவர்களின் ரசிகர்கள் மத்தியில் இருப்பதில்லை. எந்நேரமும் எலியும் பூனையுமாகவே இருந்து வருகின்றனர்.

அப்படியிருந்தும் இவர்கள் இருவரும் ஒற்றுமையாக ஒன்று சேர்வது அத்தி பூத்தாற் போல நடைபெறும் நிகழ்வு என்று தான் கூற வேண்டும்.

தற்போது மீண்டும் விஸ்வாசம் படத்திற்காக அப்படியான ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஆம், சர்கார் மற்றும் மெர்சல் பட பிரச்சனைகளின் போது பல அஜித் ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர்.

அதே போல் தல அஜித் அப்பா, தாத்தாவாக நடிக்க தான் தகுதியானவர் என பாலிவுட் பிரபலம் ஒருவர் விமர்சனம் செய்ததற்கு தளபதி ரசிகர்கள் என்ன தான் எங்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அஜித்தை விட்டு கொடுக்க மாட்டோம் என குரல் கொடுத்திருந்தனர்.

இவைகளை தொடர்ந்து சர்கார், மெர்சல் படத்திற்கு அஜித் ரசிகர்கள் தளபதி ஆதரவு அளித்ததால் தற்போது நாங்களும் விஸ்வாசம் படத்திற்கு ஆதரவு அளிக்கிறோம் என களமிறங்கியுள்ளனர்.

இதற்காக சில இடங்களில் பேனர் வைத்து ரசிகர்கள் கொண்டாடிய வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தளபதி ரசிகர்கள் இப்படியான செயல் ரசிகர்களை மட்டுமில்லாமல் திரையுலகையும் பிரம்மிக்க வைத்துள்ளது.

இதே ஒற்றுமை தொடர்ந்தால் என்றென்றைக்கும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங் அஜித்தும் விஜயுமாக தான் இருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here