Thala Reference in Mr. Local Promo | One video was recently released. Sivakarthikeyan | Nayanthara | Thala Ajith | Rajesh.M

Thala Reference in Mr.Local Promo :

Thala Reference in Mr. Local Promo : சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச் சட்டை வரிசையில் மிஸ்டர் லோக்கல் படத்திலும் தல ரெஃபரன்ஸ் இடம்பெற்றுள்ளது.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல்.

வெளியானது பிக் பாஸ் 3 ப்ரோமோ – போட்டியாளர்கள் யாரு?

இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஹிப் ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

முன்னதாக இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் காரணம் ஏதும் சொல்லாமல் மே 17ம் தேதிக்கு இப்படம் தள்ளிபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து இதற்கான புரொமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் ஒரு வீடியோ அண்மையில் வெளியானது.

அந்த வீடியோவில், சிவகார்த்திகேயனும் ராதிகாவும் ஹெல்மெட் போட்டுக்கொண்டு வண்டியில் செல்வது போலவும் மேலும் சிவகார்த்திகேயன் ”நமக்கு தல தான் முக்கியம்” என பேசுவது போலவும் அமைந்துள்ளது.

சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச் சட்டை வரிசையில் இந்த படத்திலும் தல ரெஃபரன்ஸ் இடம்பெற்றுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.