Ajith

Thala Movie : அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போவது யார் என்ற ரசிகர்களின் குழப்பத்திற்கு பதில் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தல 59 படமான நேர் கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பிரபல தொகுப்பாளிக்கு மீண்டும் திருமணம் – விஜய் டிவி செய்த வேலையை பாருங்க

மே 1-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த திரைப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தான் வெளியாகும் என சமீபத்தில் தகவல்கள் வைரலாகி இருந்தன.

இதனையடுத்து தற்போது தல 60 படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தல 59 படத்தை இயக்கி வரும் வினோத் தான் அடுத்த படத்தை இயக்க கால அவகாசம் கேட்டதாக தகவல் வெளியாக இதனால் தல 60 படத்தை வேறு யாராவது தான் இயக்குவார்கள் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி தல 60 படத்தையும் ஏற்கனவே அறிவித்திருந்தபடி எச். வினோத் தான் இயக்குகிறாராம். இது குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றும் செய்தி வெளியிட்டு உறுதிப்படுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.