தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். திரையுலகில் உள்ள நடிகர் நடிகைகள் பலருக்கும் பேவரைட் நடிகரும் கூட. அஜித்தை பற்றி பேட்டிகளில் பேசாத நடிகர் நடிகைகளே இருக்க வாய்ப்பில்லை .

தமிழில் மரகத நாணயம், ஈரம் போன்ற படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகரான ஆதி. இவர் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடும் பொது வினோத் என்பவர் அஜித்தை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஆதி தல அஜித் எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் அல்ல. என்னுடைய பேவரைட் நடிகர் அவர் மட்டும் தான் என கூறியுள்ளார்.