Thala Fans

Thala Fans : விஸ்வாசம் கொண்டாட்டங்கள் ஒரு புறம் மாஸாக சென்று கொண்டிருக்கும் போது தற்போது அஜித் ரசிகர்கள் செய்துள்ள செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவின் மாஸான மெகா ஸ்டார்களில் ஒருவர் தல அஜித். இவர் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டரை அடுத்து அடிச்சு தூக்கு, வேட்டி கட்டு என இரண்டு சிங்கிள் டிராக்குகள் வெளியாகி இருந்தன.

இதனையடுத்து இன்று அனைத்து பாடல்களும் வெளியாக உள்ளன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது திருநெல்வேலி பகுதியை சேர்ந்த தல ரசிகர்கள் ஒன்று சேர்ந்து அப்பகுதியில் நூலகம் ஒன்றை காட்டியுள்ளனர்.

தல அஜித்குமார் & Dr. கலாம் ஐயா என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தை வரும் ஜனவரி 5-ம் தேதியில் திறப்பு விழா நடத்த உள்ளனர்.

ரசிகர்கள் என்ற பெயரில் பாலபிஷேகம், கட் அவுட் பேனர் என்று ஆரவாரம் செய்து வரும் ரசிகர்களுக்கு மத்தியில் தல ரசிகர்களின் இப்படியான ஒரு முயற்சி பலரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமில்லாமல் பலரையும் கொண்டாட வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.