trending

நடிகர் அஜித் அடுத்து நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் தலைப்பான ‘வலிமை’ டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்திற்கு வலிமை என்கிற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து டிவிட்டரில் ‘Valimai’ என்கிற ஹேஷ்டேக்கில் அஜித் ரசிகர்கள் பலரும் டிவிட் போட தற்போது இந்த ஹேஷ்டேக் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. படத்தின் தலைப்பு வெளியாகி சில மணி நேரங்களிலேயே 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிவிட் செய்துள்ளனர். இது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. அதேபோல் தமிழில் ‘வலிமை’ என்கிற ஹேஷ்டேக்கில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் டிவிட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஹேஷ்டேக் 4வது இடத்தில் இருக்கிறது.