Thala Ajith Valimai
5 வருடத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர்களின் படங்கள் பெரும்பாலும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களை தான் குறி வைக்கும்.

கடந்த மூன்று வருடங்களாக தீபாவளிக்கு தளபதி விஜயின் படங்கள் தான் ரிலீசாகி வருகின்றன. அஜித்தின் படம் இறுதியாக 2015-ல் தீபாவளிக்கு வெளியாகி இருந்தது.

இதனையடுத்து தற்போது மீண்டும் தல அஜித்தின் படம் தீபாவளி நாளன்று ரிலீசாக உள்ளது. ஆம், எச் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள வலிமை திரைப்படத்தை படக்குழு 2020 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வலிமை படத்தின் படப்பிடிப்புகள் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. தற்போது நடிகர் நடிகைகளுக்கான தேர்வு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.