Thala Dhoni Celebrating his 38th Birthday : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Happy Birthday Dhoni

Thala Dhoni Celebrating his 38th Birthday :

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டன் என்றால் ரசிகர்கள் சொல்லும் பெயர் எம்எஸ் தோனி.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. தற்போது ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்தியாவுக்கு இரண்டு உலகக்கோப்பையை வென்று கொடுத்து பெருமை சேர்த்தவர். அவரது தலைமையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா வென்றது.

டூ பீஸ் உடையில் கிரிக்கெட் விளையாடும் பிக் பாஸ் 3 நடிகை – சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ.!

கடைசி கட்டத்தில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் சிறந்தவர் என்ற பெருமையை பெற்றவர். நட்சத்திர வீரரான தோனிக்கு நேற்று 38-வது பிறந்த நாள் ஆகும்.

இதையடுத்து அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது.

அதில், ‘‘இந்திய கிரிக்கெட்டின் வடிவமைப்பை மாற்றிய பெயர் மறுக்க முடியாத மரபு கொண்ட பெயர் எம்.எஸ்.தோனி. இது வெறும் பெயரல்ல’’ என்று தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூறும்போது, “தோனி எப்போதும் அமைதியாகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

அவர் என்னுடைய கேப்டன். தோனி எப்போதும் என் கேப்டனாக இருப்பார். எங்கள் புரிதல் எப்போதும் புத்திசாலித்தனமானது. அவரது ஆலோசனையை நான் எப்போதும் கேட்பேன்’’ என்றார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோரும் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.