Ajith

Thala Cinematographer : ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் காஞ்சனா.

தமிழ் சினிமாவில் இன்று பார்ட்-2 சீசன் மற்றும் பேய் சீசன் டிரெண்டாக இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த படம் தான்.

தல கொடுத்த தைரியத்தில் ரஜினியுடன் துணிந்து மோதும் சூர்யா – விவரம் உள்ளே!

இந்நிலையில் இப்படம் இந்தியில் தற்போது லக்‌ஷ்மி எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் அக்ஷய் குமார் ஹீரோவாகவும் தோனி படத்தில் நடித்த கியாரா அத்வானி ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர்.

நேற்று இதன் படப்பிடிப்பு மும்பையில் பாடல் காட்சியுடன் துவங்கியிருப்பதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தின் ஒளிப்பதிவாளராக வெற்றி பணியாற்றி வருகிறாராம்.

தல 60 படத்தின் அதிரடி அப்டேட் – ரசிகர்களுக்கு மெகா கொண்டாட்டம்.!

இவர் அஜித்துடன் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களில் பணியாற்றி இன்று அஜித்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.