Thala Birthday CDP
Thala Birthday CDP

தல அஜித் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் எனக் கூறியும் ரசிகர்கள் அதனை காதில் கூட வாங்கவில்லை.

Thala Birthday CDP : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் வரும் மே ஒன்றாம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

தல அஜித்தின் பிறந்த நாள் என்பதால் வழக்கம்போல ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாட பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

தல அஜித்தை போலவே ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டி மிரள வைத்த மாஸ்டர் மாளவிகா மோகனன் – வைரலாகும் வீடியோ

கொரானா வைரஸ் தாக்கம், ஊரடங்கு உத்தரவு என இந்தியாவே ஸ்தம்பித்துப் போய் இருக்கும் இந்த நிலையில் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என அஜித் நேற்று ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்.

ஆனால் ரசிகர்கள் அதையெல்லாம் காதில் கூட வாங்கியதாக தெரியவில்லை. அவர்கள் திட்டமிட்டபடி அஜித்தின் பிறந்தநாள் காமன் டிபி வெளியாகி இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

இந்த புகைப்படத்தை மொத்தம் பதினான்கு பிரபலங்கள் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.