Watch Video: Thala Ajith’s Valimai Big Sale in Tamilnadu Satellite Rights

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்திருந்தன. மேலும் இந்த படத்தின் தமிழக உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது இப்படத்தின் தமிழக உரிமை ரூபாய் 60 முதல் ரூபாய் 80 கோடி வரை விற்பனையானதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த தகவல் அஜித் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.