Thala Ajith's Gaja Relief

Thala Ajith’s Gaja Relief : கோவா டூரை முடித்து கொண்டு சென்னை வந்தடைந்த தல அஜித் முதல் வேலையாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதியுதவி அளித்துள்ளார்.

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பலத்த சேதத்திற்கு ஆளாகியுள்ள. மக்கள் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இதனால் பல திரையுலக பிரபலங்கள் உதவி கரம் நீட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல், விஜய், விஜய் சேதுபதி, விக்ரம், சிவகார்த்திகேயன், ஜி.வி பிரகாஷ் என பலர் உதவி செய்து வருகின்றனர்.

இவர்களை தொடர்ந்து தல அஜித்தும் டெல்டா பகுதி மக்களுக்காக ரூ 15 லட்சத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார்.

கோவா டூரை முடித்து கொண்டு சென்னை வந்தடைந்ததும் மக்களுக்காக அஜித் நிதியுதவி அளித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

இதன் மூலம் தமிழக மக்களுக்காக அஜித் ஒன்றும் செய்யவில்லை என கூறி வந்த நெட்டிசன்கள் வாயையும் அடைந்துள்ளார் தல அஜித்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.