Thala Ajith's First Salary in Cinema Industry
Thala Ajith's First Salary in Cinema Industry

இன்று ரூபாய் 50 கோடி வரை சம்பளம் வாங்கும் அஜித் தன்னுடைய முதல் படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

Thala Ajith‘s First Salary in Cinema Industry : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இறுதியாக நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணியில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கொரானா ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

தற்போது தல அஜித் ஒரு படத்திற்காக ரூபாய் 40 கோடி முதல் 50 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.

Fan Made Valimai First Look Poster

ஆனால் இவர் தன்னுடைய முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?? வெறும் ரூபாய் 2500 தானாம்.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. வெறும் 2500 ரூபாய் சம்பளம் வாங்கிய அஜித் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் உழைப்பின் காரணமாக இன்று உச்சத்தை அடைந்து ரூபாய் 50 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.