தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி இருந்த விவேகம் படம் தமிழில் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

ஆனால் தமிழகத்தை தாண்டி வெளியான மற்ற இடங்களில் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வந்தது.

சமீபத்தில் இப்படம் கன்னட மொழியிலும் கமாண்டோ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் கர்நாடக ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது. தொடர்ந்து பல தியேட்டர்களில் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது கர்நாடக விநியோகிஸ்தர்கள் பலரும் கமாண்டோ நல்ல லாபம்  கொடுத்து வரும் படம் என பாராட்டி வருகின்றனர். இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.