Thala Ajith With Bullet Bike

புல்லட் பைக் கால்மேல் கால்போட்டு கெத்தான லுக்கில் தல அஜித் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thala Ajith With Bullet Bike : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. எக்ஸ் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒன்றரை வருடங்களாக படம் பற்றி எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில் வரும் மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாள் விருந்தாக வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து படத்தின் டீசர் டிரைலர் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தல அஜித்தின் பழைய போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது தல அஜித் புல்லட் பைக்கில் மீது கால் மேல் கால் போட்டு செம கெத்தான லுக்கில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. பேரரசு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திருப்பதி படத்திற்காக நடத்தப்பட்ட போட்டோ சூட் புகைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.