Viswasam

Viswasam Karnataka : தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமில்லாமல் கர்நாடகாவிலும் வசூல் வேட்டையாடியுள்ளது. அந்த வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம். தமிழகத்தில் தற்போது வரை மாபெரும் வசூல் வேட்டையாடி வருகிறது.

அதே போல் இப்படம் கர்நாடகாவிலும் வசூல் வேட்டையாடி சாதனை படைத்து வருகிறது. படம் வெளியாகி 29 நாட்கள் ஆகியுள்ள நிலையில் கர்நாடகாவில் மட்டுமே ரூ 10.10 கோடி வசூல் வேட்டையாடியுள்ளது.

ஆரம்பம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து தற்போது இப்படம் 4-வது முறையாக டப் செய்யப்பட்டு கர்நாடகாவில் வெளியாகியுள்ளது.

இதுவரை எந்தவொரு தமிழ் நடிகரின் படமும் கர்நாடகாவில் இப்படியான வசூல் வேட்டை நடத்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.