Ajith Video : தல அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, விவேக் என பலர் நடித்து வருகின்றனர்.

விஸ்வாசம் படம் மட்டுமில்லாமல் MIT யூனிவர்சிட்டி மாணவர்களின் ஹெலிகாப்டர் ஆராய்ச்சிக்கான மாணவர்களின் குழுவிற்கு ஆலோசகராவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்புகளை முடித்து விட்டு சென்னை திரும்பிய தல அஜித் MIT மாணவர்களுடன் ஆளில்லா விமான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதனை ரசிகர்கள் சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.