Thala Ajith Video About 144 Rule
Thala Ajith Video About 144 Rule

தல அஜித்தை வைத்து அடுத்த கொரானா விழிப்புணர்வு வீடியோவை தமிழக போலீஸ் வெளியிட்டுள்ளது.

Thala Ajith Video About 144 Rule : சீனாவில் உருவாகிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்குநாள் கிடுகிடுவென்று உயர்ந்து வருகிறது.

இதனை கட்டுக்குள் வைக்க இந்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மக்கள் நிச்சயம் ஊரடங்கை பின்பற்றியே ஆகவேண்டும் என கூறி வருகிறது.

ஊரடங்கால் நல்ல துணி கூட இல்லாமல் பைத்தியம் பிடித்து ஆடும் கோமாளி பட நடிகை – வீடியோவைப் பார்த்து பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்.!

இந்த நிலையில் தமிழக போலீஸூம் பல்வேறு விதங்களில் கொரானா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

சினிமா பட டயலாக்குகளை வைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அஜித்தின் மங்காத்தா பட காட்சியை வைத்து புதிய விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது.

தேனி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.